நீதிமன்றத்தின் உத்தரவால் விக்ரம் படக்குழுவினர் அதிர்ச்சி
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சென்னை உள்பட பல நகரங்களில் அதிகாலை காட்சி திரையிட திட்டமிட்டு உள்ளதாகவும், அதிகாலை காட்சிக்கான டிக்கெட்டுகள் 600 ரூபாய் முதல் 900 வரை விற்பனையாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் அதிகாலை காட்சியில் அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த டிக்கெட் விற்பனைக்குரிய வரி அரசுக்கு முறையாக செலுத்தப்படுவதில்லை என்றும், அதுமட்டுமின்றி தமிழக அரசு சட்ட விதிகளின்படி இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிட கூடாது என்றும் ஆனால் விதிகளை மீறி திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வருவதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.