‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் வெளியான ரிலீஸ் தேதி!

சியான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cobra, Vikram, Srinidhi Shetty, Irfan Pathan, Tamil Cinema 21-May-2022 001

சியான் விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நேற்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர் உட்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version