KGF 2 பட இயக்குனரின் அடுத்த ஹீரோ – வெளியானது அதிரடி அறிவிப்பு

Prashanth Neel Next 21-05-2022

அண்மையில் வெளியான கே ஜி எப் 2 இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது. இது கன்னட சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் வசூல் சாதனை படைத்து வருகின்றது.

கே ஜி எப் முதலாம் பாகம் வெற்றி பெற்றாலும் கன்னட திரைப்படமான கே ஜி எப் 2 பெரியளவில் ரீச் ஆகும் என்பது சந்தேகம் என நினைத்தவர்களுக்கு நெத்தியடி வசூலைத் தந்துள்ளது. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனையை கே ஜி எப் 2 நிகழ்த்தியுள்ளது.

இப்படத்தை இயக்கி முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்த பிரஷாந்த் நீல், அடுத்து தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகர் ஜுனியர் என்.டி.ஆருடன் தான் கூட்டணி அமைக்கவுள்ளார்.

மேலும் படத்திற்கான ஃபஸ்ட் லுக் இன்று ஜுனியர் என்.டி.ஆர் பிறந்தநாளில் வெளியாகியுள்ளது.