‘தி லெஜண்ட்’ படத்தின் வாடிவாசல் பாடலுக்காக குவியும் பாராட்டுக்கள்!

வாடிவாசல் பாடல் வெளியாகி செம கலக்கலாக இருக்கிறது

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The Legend, Saravanan Arul, Tamil Cinema 20-May-2022 001

இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ‘வாடிவாசல்’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. ஏராளமான துணை நடிகர்கள், நடனக்கலைஞர்கள், அற்புதமான செட் என கலர்புல்லாக இருக்கிறது என இந்த பாடலை பார்த்தவர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் அளித்து வருகிறார்கள்.

The Legend, Saravanan Arul, Tamil Cinema 20-May-2022

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜொனிதா காந்தி மற்றும் பென்னி தயால் குரலில் உருவாகியுள்ள இந்த பாடலை சினேகன் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ராஜீசுந்தரம் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார் என்பதும் இவர் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.