குடும்பத்துடன் துபாய் சென்ற நெல்சனுடன் சென்ற பிக்பாஸ் பிரபல நடிகர் மற்றும் நடிகை!

இயக்குனர் நெளிசனுடன் துபாய் சென்ற நடிகர் மற்றும் நடிகை!

இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவருடன் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகரும், பிரபல நடிகை ஒருவரும் மற்றும் சிலரும் சென்றுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nelson Dilipkumar, Kavin, Priyanka Mohan, Tamil Cinema 20-May-2022

‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் தடம் பதித்தவர் நெல்சன் திலீப்குமார். தொடர்ந்து ‘டாக்டர்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற 100 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தை இயக்கினார்.

அதன்பின் தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Nelson Dilipkumar, Kavin, Priyanka Mohan, Tamil Cinema 20-May-2022 001

இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் தனது மனைவி, மகனுடன் துபாய் சுற்றுலா சென்றுள்ளார். அவருடன் நடிகர் கவின், நடிகை பிரியங்கா மோகன் உள்பட ஒருசிலர் சென்று உள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.