சிம்புவின் ‘புல்லட்’ பாடலுக்கு செம குத்து போட்ட சின்னத்திரை பிரபலம்!

புல்லட் பாடலுக்கு நடனமாடிய சின்னத்திரை நடிகையின் வீடியோ வைரல்!

Raveena Daha, Simbu, Bullet Song, Tamil Cinema 18-Apr2022: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் ‘தி வாரியர்’ என்ற திரைப்படத்தில் சிம்பு பாடிய ‘புல்லட்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகியது.

Raveena Daha, Simbu, Bullet Song, Tamil Cinema 18-Apr2022

இந்நிலையில் இந்த பாடலுக்கு சின்னத்திரை பிரபலங்கள் நடனமாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் பிரபலங்களான ஆஜித்-கேப்ரிலா ஆகிய இருவரும் ஜோடி போட்டு ‘புல்லட்’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.

அந்தவகையில் சின்னத்திரை பிரபலமான ரவீனாவும் இந்த பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா, விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் ‘பூவே பூச்சூடவா’ உள்பட ஒரு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Raveena Daha, Simbu, Bullet Song, Tamil Cinema 18-Apr2022 001

இவர் தனது சமூக வலைத்தளத்தில் பொது இடங்களில் ஹிட்டான பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவு செய்து வரும் நிலையில் இந்த புல்லட் பாடலுக்கும் பொது இடத்தில் நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்த புல்லட் பாடலுக்கு நடனமாடியதையடுத்து இந்த பாடல் ஹிட் ஆகி வருகிறது என்பது தெரிகிறது.