‘விக்ரம்’ படத்தில் சூர்யா பற்றிய செம அப்டேட்
Kamal Haasan, suriya, Vijay Sethupathi, Tamil Cinema 18-Apr-2022: கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தில் சூர்யா நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சூர்யாவின் காட்சிகள் இந்த படத்தில் எத்தனை நிமிடங்கள் உள்ளன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற மூன்று முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. அனிருத் இசையில் உருவான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த படத்தில் மற்றொரு நட்சத்திர நாயகனாக சூர்யாவும் இணைந்து உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யா இந்த படத்திற்காக இரண்டு நாட்கள் நடித்து கொடுத்ததாகவும் அவர் நடித்த காட்சிகள் 10 நிமிடங்கள் திரையில் தோன்றும் என்றும் அவருடைய கேரக்டர் படத்தின் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்த போது எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் உடனடியாக படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மற்றும் ஏற்கனவே கமல்ஹாசனின் ‘மன்மதன் அன்பு’ என்ற திரைப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கமல்ஹாசனின் படத்தில் மீண்டும் சூர்யா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.