போனிகபூர் விஜய் படத்தை தயாரிக்க வைத்த இரண்டு நிபந்தனைகள்!

விஜய் படத்தை தயாரிக்க போனி கபூர் விதித்த நிபந்தனைகள்

Vijay, Thalapathy 66, Boney Kapoor, Tamil Cinema 18-Apr-2022: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தொடர்ச்சியாக அஜித்தின் மூன்று படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் தற்போது அவர் தயாரித்துள்ள உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay, Thalapathy 66, Boney Kapoor, Tamil Cinema 18-Apr-2022

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் படத்தை எப்போது தயாரிப்பீர்கள் என்று கேட்டபோது அதற்கு பதில் அளித்த போனிகபூர் ‘விஜய் படத்தை தயாரிக்கக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை என்றும், நல்ல கதை மற்றும் நல்ல இயக்குனர் கிடைத்தால் விஜய் படங்களை தயாரிக்க நான் தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அஜீத்தை அடுத்து விஜய் படத்தையும் விரைவில் போனிகபூர் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்-போனிகபூர் கூட்டணியில் படம் உருவாகுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.