முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரல்
Pranitha Subhash, Suriya, Karthi, Tamil Cinema 18-Apr-2022: சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த பிரபல நடிகைக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சூர்யாவின் ‘மாஸ்’ மற்றும் கார்த்தி நடித்த ‘சகுனி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவரின் 34 வது பிறந்தநாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. தற்போது நடிகை ப்ரணிதாவுக்கு வளைகாப்பு விழா நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரின் புகைப்படங்களுக்கு பலரும் லைக்ஸ் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


