அனிருத் அடையவுள்ள மிக பெரிய வெற்றி தகவல்
Anirudh, Beast, Vikram, Thiruchitrambalam, Tamil Cinema 18-Apr-2022: அனிருத் இசையில் உருவான மூன்று படங்களின் பாடல்கள் தொடர்ச்சியாக ஹிட்டானதை அடுத்து ஹாட்ரிக் வெற்றியை அவர் பெற்றுள்ளார் என்றும் மேலும் அவரது இசையில் உருவான இரண்டு படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு மிகப்பெரிய வெற்றிகள் அவருக்கு காத்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

அனிருத் இசையில் உருவான தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’, விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ ஆகிய மூன்று படங்களிலும் உள்ள பாடல்கள் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் உலக அளவில் ஹிட்டானது.
இந்நிலையில் தொடர்ச்சியாக 3 படங்களின் பாடல்களிலும் வெற்றி பெற்ற நிலையில் ஹாட்ரிக் அடித்துள்ளார் என்பதும் அனிருத் அடுத்ததாக ஜூன் மூன்றாம் தேதி வெளியாகவிருக்கும் ‘விக்ரம்’ படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதே போல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் ரிலீசாகி மிகப் பெரிய வெற்றியை அவருக்கு அளிக்க காத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.