ஓடிடியில் ‘கே.ஜி.எப் 2’ படத்தை பார்க்க சந்தாதாரர்களுக்கும் இவ்வளவு கட்டணமா? அதிர்ச்சி தகவல்

‘கே.ஜி.எப் 2’ படத்தை ஓடிடியில் பார்க்க செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பான விபரம்

KGF Chapter 2, Yash, Srinidhi Shetty, Tamil Cinema 17-Apr-2022: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது என்பதும் இந்த படம் 1100 கோடியை தாண்டி தற்போது திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

KGF Chapter 2, Yash, Srinidhi Shetty, Tamil Cinema 17-Apr-2022

இந்நிலையில் ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் அமேசன் பிரைம் விடியோவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் பார்க்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சந்தாதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தாதாரர்களாக இருந்தாலோ அல்லது சந்தாதாரராக இல்லாமல் இருந்தாலோ ரூபா.199 கட்டணம் செலுத்தி ‘கே.ஜி.எப் 2’ திரைப்படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் அமேசான் பிரைமில் ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் இடம் பெறவுள்ளது.

KGF Chapter 2, Yash, Srinidhi Shetty, Tamil Cinema 17-Apr-2022 001

‘கே.ஜி.எப் 2’ படத்திற்காக ரூபா.199 கட்டணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்ற அறிவிப்பு சந்தாதாரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.