கேஜிஎப் 2ல் இவ்வளவு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது – கொந்தளிக்கும் பா ரஞ்சித்

K.G.F 2, Tamil Cinema 14th May 2022

K.G.F 2, Tamil Cinema 14th May 2022 : அண்மையில் வெளியான கே ஜி எப் 2 இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது. இது கன்னட சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் வசூல் சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில், இயக்குனர் பா ரஞ்சித் இத்திரைப்படத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாவும் , மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் சொல்லுவோம் என்று ஒரு கதையை தயார் செய்துகொண்டிருப்பதாக கோடம்பாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திரைப்படத்தில், இங்கே இருக்கும் தங்கத்தை யார் கண்டுபிடித்தது. எந்தெந்த ஊர்களுக்கு அதை கடத்துகிறார்கள், எவ்வளவு உயிர் பலி வாங்கியது, என்றெல்லாம் இந்தப்படத்தில் தெளிவாக சொல்லவில்லை, மேலும் பல உண்மைகளை மறைத்துள்ளனர். இந்நிலையில் இப்பொழுது இதைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார் பா ரஞ்சித்.

மேலும் இத்திரைப்படத்தில் நாயகனாக விக்ரம் நடிக்கவுள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.