Shivani Narayanan 14th May 2022
Shivani Narayanan – 14th May 2022 – தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை. இவர் 5 மே 2001 அன்று சென்னையில் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் ஓரிரு விளம்பரங்களில் நடித்தார். பின்பு 2016 இல் ஹீரோயின் கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் வாய்ப்பு கிடைத்து.
ஷிவானி நாராயணன் 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் விஜய் சீரியலான பகல் நிலவு தொடரில் நடிக்கத் தொடங்கினார், இது தொடர்ந்து மூன்று வருடங்கள் கிட்டத்தட்ட 800 எபிசோடுகள் வரை சென்றது. 2019 ஆம் ஆண்டில் அவர் ஜீ தமிழ் சீரியலான ரெட்டை ரோஜாவில் நடித்தார், அவர் இரட்டை சகோதரிகள் அனுராதா “அனு” மற்றும் அபிராமி “அபி” என இரட்டை வேடங்களில் நடித்தார். இதுவும் 2020 வரை தொடர்ந்தது, பின்னர் அவர் அதிலிருந்து விலகினார் அப்போது அவருக்கு பதிலாக நடிகை சாந்தினி தமிழரசன் மீதி தொடரை நடித்தார்.
ஷிவானி நாராயணன் அதன் பிறகு மிகவும் பிரபலமான ஸ்டார் விஜய்யில் இந்திய ரியாலிட்டி தொடரான பிக் பாஸ் தமிழின் நான்காவது சீசனில் பங்கேற்றார். மொத்தம் 18 ஹவுஸ்மேட்களுடன் இதில் பங்கு பற்றினார். இது 105 நாட்கள் வரை தொடர்ந்தது. பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இல் அவர் இளைய போட்டியாளராக இருந்தார். போட்டியின் இறுதி வாரத்திற்கு முன்பு ரசிகர்களிடையே பெற்ற வாக்குகள் அடிப்படையில் அவர் வெளியேற்றப் பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் 98 நாட்கள் தங்கியிருந்தார். இதன் மூலம் இவர் மிகப் பிரபலமானார்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.