ஆர்.ஜே விக்னேஷ்காந்த் திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
RJ Vigneshkanth Wedding Photos, Tamil Cinema 14-Apr-2022: நடிகர், ஆர்ஜே, பட்டிமன்ற பேச்சாளர், யூடியூபர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் மணமகளுடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்த ‘தேவ்’, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசையை முறுக்கு’, ரியோ நடித்த ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ்காந்த். இவர் நடத்திவரும் யூடியூப் சேனல் பிரபலம் ஆனது என்பதும் இவர் அவ்வப்போது பட்டிமன்றங்களில் சிறப்பாக பேசுவார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஆர்.ஜே விக்னேஷ்காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.