நடிகை சரிகாவுடன் 30 வயது இளைஞன் காதல் குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Sarika, Kamal Haasan, Tamil Cinema 14-Apr-2022: முன்னணி நடிகைகள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனின் தாயார் சரிகா, 30 வயது இளைஞரை காதலிப்பது போன்ற ஒரு திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த திரைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமேசான் பிரைமில் நேற்று ஆந்தாலஜி திரைப்படமான ‘மாடர்ன் லவ் மும்பை’ வெளியானது. இதில் 6 குறும்படங்கள் இணைந்திருக்கிறது என்பதும் ஆறு கதைகளுமே விவகாரமான காதல் கதைகளை கொண்டதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு பகுதியான குறும்படத்தில் நடித்துள்ள 60 வயதான சரிகாவை 30 வயதான இளைஞர் ஒருவர் காதலிப்பது போல் உள்ளது. இதனை அறிந்ததும் அந்த இளைஞரை தனியாக கூப்பிட்டு சரிகா கண்டிப்பது போன்ற காட்சிகளும் இருக்கும் நிலையில், அதே நேரத்தில் அந்த இளைஞரை ஏக்கத்துடன் சரிகா பார்ப்பது போன்றும் கதை முடிவடைந்துள்ளது.

இவ்வாறான கதைகள் விவகாரமாக இருந்தாலும் ஒரு காட்சியில்கூட விரசமில்லாமல் டீசண்டாக தத்துரூபமான முறையில் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஆறு குறும்படங்களூமே மிக அபாரமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சரிகாவை திரையில் பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.