நடிகர் மோகனின் ‘ஹரா’ படக்குழுவினர் தமிழக முதல்வரிடம் வைத்த முக்கிய வேண்டுகோள்! வைரலாகும் தகவல்

‘ஹரா’ படக்குழுவினர் தமிழக முதல்வரிடம் பெண்களை கருத்தில் கொண்டு வைத்த கோரிக்கை

Mohan, Haraa, MK Stalin, Tamil Cinema 14-Apr-2022: கடந்த 80-90 ஆண்டுகளில் ‘பயணங்கள் முடிவதில்லை’ தொட்டு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் மோகன் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

Mohan, Haraa, MK Stalin, Tamil Cinema 14-Apr-2022 001

விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தந்தை மற்றும் மகள் சென்டிமென்ட் கொண்ட படம் என்றும் சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண மனிதனின் கோபம் தான் இந்த படத்தின் மையக்கரு என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘ஹரா’ படக்குழுவினர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

Mohan, Haraa, MK Stalin, Tamil Cinema 14-Apr-2022

பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் இது போன்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகமும் மூன்று நாட்கள் விடுமுறை அளித்து நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளனர்.

மற்றும் ‘ஹரா’ படத்தில் மோகன் தனது மகளுக்காக மூன்று நாட்கள் பள்ளி நிர்வாகத்திடம் விடுமுறை கேட்கும் காட்சி இருப்பதை அடுத்து இந்த கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் நிச்சயம்ஆமோதிப்பர் என்று நம்புகிறோம் என்றும்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.