இவர்களுடன் ஒரு அறையில் இருப்பதை விட தெரு நாய்களுடன் பாதுகாப்பாக இருப்பேன்” சின்மயி விளாசல்! வைரல் பதிவு

சின்மயி கோபத்துக்கு இரையான ராதாரவி, வைரமுத்து

Vairamuthu, Radha Ravi, Chinmayi, Tamil Cinema 14-Apr-2022: பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டு கூறினார் என்பதும், அதேபோல் நடிகர் ராதாரவி மீதும் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

Vairamuthu, Radha Ravi, Chinmayi, Tamil Cinema 14-Apr-2022

இந்நிலையில் ஒரு பெண், ஆண்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆகிய நிலையில் அந்த வீடியோவுக்கு பிரியாணிமேன் என்பவர் அளித்த பதிலுக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

அந்தவகையில் பிரியாணிமேனை விமர்சனம் செய்த சின்மயி, ஆண்களை தெரு நாய் என்று கூறிய பெண்ணை ஏன் விமர்சனம் செய்யவில்லை என நெட்டிசன்கள் கேட்டனர்.

Vairamuthu, Radha Ravi, Chinmayi, Tamil Cinema 14-Apr-2022 001

அதற்கு பதில் கூறிய சின்மயி, ‘பொதுவாக மனிதர்களை விட நாய்கள் நம்பகமானவர்களாக இருக்கின்றார்கள் என்றும், என்னைப் பொருத்தவரை ராதாரவி மற்றும் தமிழ் கவிஞர் ஆகிய இருவருடன் ஒரு அறையில் இருப்பதை விட தெரு நாய்களுடன் பாதுகாப்பாக இருப்பேன்’ என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.