படத்தின் வெற்றியுடன் அட்லீக்கு நன்றி தெரிவித்த அறிமுக இயக்குனர்
Sivakarthikeyan, Priyanka Mohan, Sivaangi Krishnakumar, Don, Tamil Cinema 14-Apr-2022: நேற்றைய தினம் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘டான்’ படம் சூப்பர் என்றும் நல்ல பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் என்ற அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்றும் சிபியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றும் அருமையான படம் என்றும் உணர்வு பூர்வமாக கொண்டு சென்றிருக்கிறார் என்றும் உனக்கு மட்டுமின்றி உன்னுடைய மொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அட்லீயின் இந்த ட்வீட்டுக்கு சிபி சக்கரவர்த்தி தனது நன்றியை தெரிவித்து ‘என்னால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை என்றும், என்னுடைய குருவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றும் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு சிபி சக்கரவத்தியும் அட்லீயும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பதிவுகள் வைரலாகி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Thanks a ton to my guru @Atlee_dir sir your appreciation means a lot to me sir
— Cibi Chakaravarthi (@Dir_Cibi) May 13, 2022
Couldn’t express my happiness through words..Am highly elated sir 🙏 https://t.co/yylzH1TKAo