இசை மேதையான ‘பண்டிட் ஷிவகுமார் ஷர்மா’ மரணம்! நட்பிற்கு உதாரணமான புகைப்படம் வைரல்

பண்டிட் ஷிவகுமார் ஷர்மா மறைவில் நட்பின் ஆழத்தை உணர்த்திய புகைப்படம் இணையத்தில் வைரல்

Shivkumar Sharma, Tamil Cinema 14-Apr-2022: கடந்த 10 ஆம் தேதி 84 வயதான இசை மேதையான பண்டிட் ஷிவகுமார் சர்மா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய இறுதிச் சடங்கின்போது ஷிவகுமாரின் நெருங்கிய நண்பரான சாகிர் உசேன் அவருடைய உடலை தூக்கிச் சென்றவர்களில் ஒருவராக இருந்தார்.

Shivkumar Sharma, Tamil Cinema 14-Apr-2022

அது மட்டுமின்றி அவரது உடல் எரியூட்டப்பட்ட பின், தனியாக அங்கு நின்று தனது நீண்டநாள் நண்பருக்கு பிரியா விடை கொடுத்த புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

Shivkumar Sharma, Tamil Cinema 14-Apr-2022 001

இந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள அனைவரும் கூறுவது இந்த ஒரு புகைப்படம் முழு வாழ்க்கையையும் விவரிக்கிறது என்றும் நட்பின் ஆழம், ஒற்றுமை மற்றும் இழப்பு எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும் என்பதையும் தத்ரூபமாக காட்டும் புகைப்படமாக உள்ளது என்று பதிவு செய்து வருகின்றனர்.