சிம்பு பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்! இது வேற லெவல் கூட்டணி

சிம்பு பட இயக்குனருடன் முதன் முதலில் இணையும் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan, Venkat prabhu, tamil cinema 13-Apr-2022: விஜய் டிவி மூலம் சினிமாவுக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவான ‘டான்’ படம் இன்று வெளியாகியுள்ளது.

ivakarthikeyan, Venkat prabhu, tamil cinema 13-Apr-2022

‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். பிரியங்கா அருள்மோகன், புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்துள்ளது.

இன்று வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ivakarthikeyan, Venkat prabhu, tamil cinema 13-Apr-2022 001

இந்நிலையில் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

‘மாநாடு’ வெற்றியை தொடர்ந்து தற்போது நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் ஒரு படம் இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் இவர் புதிய படம் இயக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.