இப்படி வொர்க்-அவுட் செய்தால் வீடியோ வைரலாகாமல் என்ன செய்யும் – சமந்தா

Samantha Ruth Prabhu 13-Apr-2022

Samantha Ruth Prabhu, Tamil Cinema 13-Apr-2022: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தாவும் நடித்திருந்தார். இதில் சமந்தாவின் கதாபாத்திரம் அனைவரின் மத்தியிலும் ஒரு பேசுபொருளாக காணப்பட்டது. அந்தளவுக்கு சமந்தா தனது நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டி இருந்தார்.

அந்நிலையில் ‘காதுவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் தயாரிப்பாளருக்கு திருப்பதியை கொடுத்துள்ளது.

நடிகை சமந்தா தற்போது காஷ்மீரில் விஜய்தேவரகொண்டாவுடன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அங்கும் அவர் அதிகாலை நேரத்தில் ஜிம் சென்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

“நான் எங்கே சென்றாலும் இந்த ஒரு பழக்கத்தை மட்டும் விடுவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்” என்று கூறி தனது பயிற்சியாளரின் உதவியுடன் பலுதூக்கும் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது .

Samantha Ruth Prabhu, Tamil Cinema 13-Apr-2022
Samantha Ruth Prabhu, Tamil Cinema 13-Apr-2022
Samantha Ruth Prabhu, Tamil Cinema 13-Apr-2022