நடிகர் சிம்புவின் வேற லெவல் புகைப்படங்கள் வைரல்! ‘பத்து தல’ படத்திலா?

சிம்புவின் மாஸ் ஸ்டைல் புகைப்படங்கள் வைரல்!

Simbu, Pathu Thala, Bigg Boss Tamil, Tamil Cinema 13-Apr-2022: தற்போது தமிழ் சினிமாவில் வேற லெவலில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு தற்போது ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Simbu, Pathu Thala, Bigg Boss Tamil, Tamil Cinema 13-Apr-2022

இந்நிலையில் தற்போது சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் லுக்குடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த லுக் அவர் நடித்து வரும் ‘பத்து தல’ படத்திற்கான புகைப்படங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் ஏராளமானோர் லைக் செய்து வருவதோடு வைரலாக்கி வருகின்றனர்.

Simbu, Pathu Thala, Bigg Boss Tamil, Tamil Cinema 13-Apr-2022 001

சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்க இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu, Pathu Thala, Bigg Boss Tamil, Tamil Cinema 13-Apr-2022 002

கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘முப்தி’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘பத்து தல’ திரைப்படத்தில் சிம்பு கேங்க்ஸ்டர் கேரக்டரிலும், கௌதம் கார்த்திக் காவல்துறை அதிகாரி கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், சிம்பு – கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் சில காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.