Ashna Zaveri 13th May 2022
Ashna Zaveri – 13th May 2022 -ஒரு இந்திய மாடல் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகை ஆவார். ஆஷ்னா ஜவேரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அக்டோபர் 18, 1993 இல் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இது வணிக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
ஆஷ்னா அடுத்த ஆண்டு மீண்டும் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தார். காளிதாஸ் ஜெயராமின் மீன் குழம்பும் மண் பானையும், நகுலின் பிரம்மா.காம், பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜூனனின் நாகேஷ் திரையரங்கம் மற்றும் விமலின் எவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ஆகியவை இவரது மற்றைய தமிழ் திரைப்படங்கள் ஆகும்.
ஆஷ்னாவின் வெளிவரவிருக்கும் திரைப்படம் கலையரசனின் டைட்டானிக் காதலும் கவுந்து போகும். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 643 ஆயிரத்துக்கு மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அவரது படங்கள் இதோ.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.