‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்திருப்பது பற்றி வந்த தகவல் உண்மையா? வைரலாகும் பதிவு

விக்ரம் படத்தில் சூர்யா நடிப்பது பற்றிய தகவலின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Kamal Haasan, Vijay Sethupathi, Vikram, Suriya, Tamil Cinema 13-Apr-2022: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Kamal Haasan, Vijay Sethupathi, Vikram, Suriya, Tamil Cinema 13-Apr-2022

இந்த படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பது உண்மைதான் என நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

மேலும் சூர்யா தோன்றும் காட்சியில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர்களும் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படத்தின் சில காட்சிகள் ‘விக்ரம்’ படத்தின் கதை உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் எந்த அளவுக்கு உண்மை என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.