தோனியின் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
Dhoni, Rajinikanth, Nayanthara, Tamil Cinema 13-Apr-2022: கிரிக்கெட் வீரர் தோனி ஆரம்பிக்க இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தை ரஜினியின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் நிர்வகிக்க போவதாகவும், இந்த நிறுவனத்தின் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

இது பற்றிய விளக்கத்தில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சஞ்சய் உள்பட எந்த ஒரு நபரையும் பணியமர்த்தவில்லை என்றும், போலியான செய்திகளால் யாரும் ஏமார வேண்டாம் என்றும், நாங்கள் இப்போது பல விதமான படங்களை தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளோம் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பால் இதுவரை இந்நிறுவனம் குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) May 12, 2022