சிவகார்த்திகேயனுடன் விக்னேஷ் சிவன் இணைந்துள்ள தகவல் வைரல்
Sivakarthikeyan, Vignesh Shivan, Don, SK 20, tamil Cinema 13-Apr-2022: சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் அவர் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தில் உள்ளன. எனவே விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ‘எஸ்கே 20’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே உள்ளன என்றும் அந்த பாடல்களின் படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில், ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாகவும், இன்னொரு பாடலை அறிவு எழுதியுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இரண்டு பாடல்களை விக்னேஷ் சிவன் மற்றும் ரோகேஷ் ஆகியோர் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ மற்றும் ‘டான்’ ஆகிய படங்களுக்கு விக்னேஷ் சிவன் பாடல்கள் எழுதிய நிலையில் தற்போது மீண்டும் ‘எஸ்.கே 20’ படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.