‘பத்தல பத்தல’ பாடலில் அரசை விமர்சித்ததாக காவல்துறையில் கமல் மீது புகார்
Kamal Haasan, Vijay Sethupathi, Vikram, Pathala Pathala, Tamil Cinema 13-Apr-2022: கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று முன்தினம் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருந்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பாடலில் ஒன்றிய அரசு என்று இருந்த வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது கமல்ஹாசன் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘பத்தல பத்தல’ பாடலில் கமல்ஹாசன் எழுதிய ஒருசில வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டார்கள். நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் இது குறித்த கருத்துக்களை பதிவிட்டிருந்தார் என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் கமலஹாசன் மீது ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ள
“கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது… தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே…
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே”
என்ற வரிகள் அமைந்துள்ளதாகவும், அதேபோல் ஜாதி ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் “குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு… குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு… ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே” என்ற வரிகள் இருப்பதாகவும், இந்த வரிகளை பாடலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மேலும் இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘விக்ரம்’ படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.