‘தலைவர் 169’ படத்தில் நடிப்பது குறித்து சிவகார்த்திகேயன் அளித்த உண்மை தகவல்! வைரல் செய்தி

சிவகார்த்திகேயன் ‘தலைவர் 169’ படத்தில் நடிக்கிறாரா? வைரலாகும் செய்தி

Thalaivar 169, Rajinikanth , Aishwarya Rai, Sivakarthikeyan, Tamil Cinema 13-Apr-2022: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘தலைவர் 169’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி ஒரு பாடல் எழுத இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

169, Rajinikanth , Aishwarya Rai, Sivakarthikeyan, Tamil Cinema 13-Apr-2022

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 169’ திரைப்படம் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று திரும்பியதும் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும், மேலும் முக்கிய வேடத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தது.

இந்நிலையில், இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தெரிவித்த போது, ‘தலைவர் 169’ திரைப்படத்தில் நான் நடிப்பதாகவும் பாடல் எழுதுவதாகவும் பலர் கூறுகின்றனர். ஆனால் அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை இதுவரை நெல்சன் அழைக்கவில்லை.

மேலும் அந்த படம் இப்போது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்று கூறியுள்ளார். எனவே இப்போதைக்கு சிவகார்த்திகேயன் ‘தலைவர் 169’ திரைப்படத்தில் நடிக்க வில்லை என்பது உறுதியாகியுள்ளது.