‘தளபதி 66’ குறித்து மனோபாலா பகிந்த டுவிட்! வைரலாகும் தகவல்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் மனோபாலா

Thalapathy 66, Vijay, Rashmika, Shaam, Samyuktha Shanmuganathan, Tamil Cinema 13-Apr-2022: ‘தளபதி 66’ படத்தின் செய்தி குறித்து வதந்தியான தகவல் சமூக வலைதளங்களில் கசிந்து வந்த நிலையில் இந்த தகவல் தவறானது என மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிய தந்துள்ளார்.

Thalapathy 66, Vijay, Rashmika, Shaam, Samyuktha Shanmuganathan, Tamil Cinema 13-Apr-2022

சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் ஆகிய இருவருடன் மனோபாலா இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மனோபாலா.

இந்தப் புகைபடத்தில் சரத்குமார் மற்றும் தேனப்பன் ஆகிய இருவருமே காவல்துறை கெட்டப்பில் இருந்தனர். இதனை அடுத்து ‘தளபதி 66’ படத்தில் சரத்குமார் மற்றும் தேனப்பன் ஆகிய இருவரும் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார்கள் என்று செய்திகள் வைரலாகியது.

ஏற்கனவே ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பில் தான் சரத்குமார் உள்ளார் என்ற நிலையில் இந்த செய்தி காட்டுத்தீயாய் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் இந்த புகைப்படம் ‘தளபதி 66’ படப்ப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் தவறானது என்றும் நாங்கள் எதேர்ச்சியாக சந்தித்துக்கொண்ட நிகழ்வு தான் இது என்றும் மனோபாலா விளக்கமளித்துள்ளார்.