குக் வித் கோமாளி ஒரு நாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரக்ஷ்ன் வாங்கும் பிரமிக்கவைக்கும் சம்பளம்!

Cook With Comali 3 – Rakshan – 12th May 2022

Cook With Comali, Cook With Comali 3, Tamil Cinema 12th May 2022: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தற்போது 3 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ராகுல் தாத்தா, மனோபாலா, அந்தோணி தாசன், சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா ராமன், ரோஷினி, ஸ்ருதிகா, கிரேஸ், அம்மு அபிராமி, தர்ஷன் ஆகியோர் போட்டியாளர்களாக களம் கண்டுள்ளனர்.

மேலும் இவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பலரும் பல வழிகளில் பிரபலமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நிகழச்சியில் உள்ள கோமாளிகள், நடுவர்கள், கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தவிர்த்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷ்னும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய பங்கு என்பதை மறுக்கமுடியாது.

மேலும் ரக்ஷனுக்கு சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியிலும் சிறந்த தொகுப்பாளருக்கான விருது கிடைத்தது. இந்நிலையில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுகளுக்கு ரக்ஷன் ரூ. 1 லட்சம் சம்பளம் பெறுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Cook With Comali 3 - Rakshan - 12th May 2022