கமலின் ‘பத்தல பத்தல’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலங்கள்! வீடியோ வைரல்

கமல் பாடலுக்கு செம குத்து போட்ட பிக் பாஸ் பிரபலங்களின் வீடியோ!

Aajeedh Khalique, Samyuktha Shanmuganathan, Bigg Boss Tamil, Bigg boss Ultimate,Tamil Cinema 13-Apr-2022: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Aajeedh Khalique, Samyuktha Shanmuganathan, Bigg Boss Tamil, Bigg boss Ultimate,Tamil Cinema 13-Apr-2022 001

இந்த பாடலை கமல்ஹாசனே எழுதி பாடியுள்ள நிலையில் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடலில் உள்ள சில வரிகள் மத்திய அரசை விமர்சனம் செய்வதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டாலும் இந்த பாடலை கமல் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள் என்பதும், இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

Aajeedh Khalique, Samyuktha Shanmuganathan, Bigg Boss Tamil, Bigg boss Ultimate,Tamil Cinema 13-Apr-2022

இந்நிலையில் வழக்கம் போல் ஒரு பாடல் ஹிட்டாகி விட்டால் அந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் பிக்பாஸ் பிரபலங்களான ஆஜித் மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் ‘பத்தல பத்தல’ பாடலுக்கு செம நடனம் ஆடியுள்ளனர்.

அதேபோல் இன்னொரு வீடியோவில் சாண்டி மற்றும் அவரது மச்சினி சிந்தியா இந்த பாடலுக்கு ஆடியுள்ளார்கள். இந்த பாடலுக்கு சாண்டி தான் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.