AK 61 Updates – 12th May 2022
போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் AK 61.
இத்திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
மேலும், இத்திரைப்படத்தில் சார்பாட்டா படத்தில் நடித்த நடிகர் ஜான், மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் நடிகர் சமுத்திரக்கனி முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.