சினிமாவில் நடிகர் ஜெயராம் குடும்பத்தின் நான்காவது நபர் களமிறங்குகிறார்! குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் ஜெயராம் குடும்பத்தில் இருந்து மீண்டும் சினிமாவில் கால்தடம் பாதிக்கும் நபர்

Jayaram, Kalidas Jayaram, Malavika Jayaram, Tamil Cinema 13-Apr-2022: பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் ஜெயராமின் குடும்பத்தில் ஏற்கனவே மூன்று பேர் சினிமாவில் நடித்துள்ள நிலையில், தற்போது நான்காவது நபரும் சினிமாவில் களமிறங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Jayaram, Kalidas Jayaram, Malavika Jayaram, Tamil Cinema 13-Apr-2022

நடிகர் ஜெயராம் ஏராளமான மலையாள படங்களிலும், தமிழில் ‘கோகுலம்’, முதல் ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’, போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். தற்போது அவர் ‘பொன்னியின் செல்வன்’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜெயராமின் மனைவி பார்வதி ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதும் ‘பூவுக்குள் பூகம்பம்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jayaram, Kalidas Jayaram, Malavika Jayaram, Tamil Cinema 13-Apr-2022 001

இந்நிலையில் நடிகர் ஜெயராம் பார்வதி தம்பதியின் மகன் காளிதாஸ் ஜெயராமன் மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழிலும் நடித்து வரும் நிலையில், ஜெயராம்-பார்வதி தம்பதியின் மகள் மாளவிகாவும் தற்போது சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாளவிகா சமீபத்தில் ‘மாயம் செய்தாயோ பூவே’ என்ற இசை ஆல்பத்தில் அசோக்செல்வன் உடன் நடித்த நிலையில் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகவும், இதற்காக கதை கேட்கத் தொடங்கி உள்ளதாகவும் அனேகமாக அவர் மலையாள இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாளவிகாவுக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.