கமல் எழுதி பாடிய பாடலினால் குவியும் நெட்டிசன்கள்
Kamal Haasan, Vijay Sethupathi, Shivani Narayanan, Vikram, Tamil Cinema 12-Apr-2022: கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் அனிருத் இசையில் உருவான முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலின் வரிகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை தாக்குவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த பாடலில் வரும்
‘கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே…
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..’
எனும் வரிகளில் உள்ள ‘ஒன்றியத்தின் தப்பாலே’ என்ற வார்த்தைகளில் இருந்து கமல்ஹாசன் யாரை குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக புரிவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இந்த பாடலில் நிறைய உள்ளர்த்தங்களை கொண்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
எது இருந்தாலும் அனிருத்தின் இசையில் கமல்ஹாசன் குரலில் உருவாகிய இந்த குத்து பாடலை கேட்டும் போதே எழுந்து நின்னு ஒரு குத்து போடனும் போல இருக்கிறது என்றும், திரையில் காணும் போது திரையரங்கமே அதிரும் என்றும் கமல் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.