‘விக்ரம்’ படத்திற்கு கமல் எழுதி பாடிய பக்கா குத்து பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘விக்ரம்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டை அறிவித்த அனிருத்!

Kamal Haasan, Vijay Sethupathi, Shivani Narayanan, Andrea, Vikram, Tamil Cinema 11-Apr-2022: தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர் என்பது மட்டுமின்றி சிறந்த பாடகராகவும் பெயர் எடுத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், தெனாலி, போன்ற பல படங்களில் தனது சொந்த குரலில் பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

Kamal Haasan, Vijay Sethupathi, Shivani Narayanan, Andrea, Vikram, Tamil Cinema 11-Apr-2022

இந்நிலையில் ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடி இருப்பதாக ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் அறிவித்திருந்த நிலையில், ‘இந்த பாடல் கமல்ஹாசன் நீண்ட கால இடைவேளையின் பின் இறங்கி குத்திய பாடல்’ என்றும் ‘பத்தல பத்தல’ என்ற பாடல் இன்று வெளியாக இருப்பதாக அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் தெருவித்துள்ளார்.

நீண்ட கால இடைவேளையின் பின் கமல்ஹாசனே எழுதி பாடிய இந்த பாடல் உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.