நிக்கி கல்ராணி லேட்டஸ்ட் இன்ஸ்டா படங்கள் 11 மே 2022

Nikki Galrani 11th May 2022

Nikki Galrani – 11th May 2022 – ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். நிவின் பாலியின் 1983 என்ற மலையாளத் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் இப்படத்துக்காக பல அறிமுக நடிகை விருதுகளைப் பெற்றார்.

தமிழ் சினிமாவிற்கு டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, மரகத நாணயம், கடவுள் இருக்கிறான் குமாரு, மொட்டை சிவா கெட்ட சிவா, பக்கா, கீ, ராஜவம்சம், இடியட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவரது பிற மொழிப் படங்கள் அஜித், ஜம்போ சவாரி, இவன் மர்யாதைராமன், கிருஷ்ணாஷ்டமி, டீம் 5, தமாகா மற்றும் வெளிவர இருக்கும் மலையாளத் திரைப் படங்களான விருன்னு, மேரி அவாஸ் சுனோ.