‘தளபதி 66’ இல் மீண்டும் இணையும் பிரபலங்கள் பற்றிய தகவல்
Thalapathy 66, Vijay, Rashmika, Shaam, Samyuktha Hegde, Sangeetha Krish, Tamil Cinema 11-Apr-2022: வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், தில்ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி 66’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சங்கீதா, யோகி பாபு மற்றும் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா ஆகியோர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து விட்ட நிலையில் தற்போது இன்று மட்டும் 5 பிரபலங்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் ‘தளபதி 66’ திரைப்படம் ஒரு மிகப்பெரிய கூட்டுக்குடும்ப கதை என்று கூறப்படுவதால் அதிக நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் ஒரு சில குழந்தை நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றும் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரை ஒன்றிணைத்து இயக்குனர் வம்சி தளபதி 66 படத்தை மேலும் மெருகூட்டி வருவதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளார்.