‘கேஜிஎப் 3’ படத்தில் வில்லனாக மிரட்ட வரும் பிரபல நடிகர்! மாஸ் அப்டேட்

‘கேஜிஎப் 3’ இல் ராக்கி பாய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்

KGF 3, Yash, Rana Daggubati, Tamil cinema 11-Apr-2022: பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் உருவாக இருக்கும் ‘கேஜிஎப் 3’ படத்தின் வில்லனாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

KGF 3, Yash, Tamil cinema 11-Apr-2022

கடந்த மாதம் சித்திரை புத்தாண்டன்று 14 ஆம் தேதி வெளியான ‘கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெருவிக்கின்றன.

KGF 3, Yash, Rana Daggubati, Tamil cinema 11-Apr-2022

இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் ஒரு சில ஹாலிவுட் பிரமுகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக ரானா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ரானா இந்த படத்தில் இணைந்தால் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Posted

in

by