நயன்தாராவுக்கு வில்லனாகும் தமிழ் பட இயக்குனர்
Nayanthara, Tamil Cinema 11-Apr-2022: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ‘இமைக்காநொடிகள்’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்த நிலையில, தற்போது நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கும் மற்றொரு படத்தில் இயக்குனர் ஒருவர் வில்லனாக மிரட்ட வருகிறார்.

மேலும், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் O2. ஆக்சிஜன் என்ற அர்த்தம் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றும் ‘ட்ரீம் வாரியர்’ நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில், ஜி.எஸ் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் பரத் நீலகண்டன் வில்லனாக நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் அருள்நிதி நடித்த ‘கே 13’ என்ற திரைப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நயன்தாரா இந்த படத்தில் தாவரவியல் நிபுணராக நடித்திருப்பதாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கும் நயன்தாரா தனது குழந்தையைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பதாக இந்தப்படத்தின் இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ் கூறியுள்ளார்.