‘விக்ரம்’ படத்தின் இசை-டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறும் இடம் அறிவிப்பு
Kamal Haasan, Vijay Sethupathi, Shivani Narayanan, Andrea, Vikram, Tamil Cinema 10-Apr-2022: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அறியத்தந்தவை.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் துபாய் அல்லது சென்னையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதன்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே நாளில் இந்த படத்தின் டிரைலரும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் பிரமாண்டமான இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா!
— Vijay Television (@vijaytelevision) May 10, 2022
மே 15-ஆம் தேதி – மாலை 6 மணிக்கு
நேரு உள்விளையாட்டரங்கம், சென்னை. #KamalHaasan #VikramFromJune3 #VikramAudioLaunch #VikramTrailer pic.twitter.com/Fd5nHZKUYt