‘பத்து தல’ படத்தின் வெளிவந்த சூப்பர் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் முக்கிய தகவல்

Simbu, Priya Bhavani Shankar, Gautham Karthik, Kalaiyarasan, Tamil Cinema 10-Apr-2022: தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து சிம்பு தனது அடுத்த படமான ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Simbu, Priya Bhavani Shankar, Gautham Karthik, Kalaiyarasan, Tamil Cinema 10-Apr-2022

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முப்தி’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘பத்து தல’ திரைப்படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். சிம்பு கேங்க்ஸ்டர் கேரக்டரிலும், கௌதம் கார்த்திக் காவல்துறை அதிகாரி கேரக்டரிலும் நடிக்கும் இந்த படத்தின் அதிகளவான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Simbu, Priya Bhavani Shankar, Gautham Karthik, Kalaiyarasan, Tamil Cinema 10-Apr-2022

இந்நிலையில் சிம்பு நடிக்கும் சில காட்சிகளும், சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருப்பதாகவும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 27 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் ஒரு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Simbu, Priya Bhavani Shankar, Gautham Karthik, Kalaiyarasan, Tamil Cinema 10-Apr-2022 002

இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் நடிக்கும் இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்குக்கிறார் என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.