வெளிவந்த உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ டிரைலர்
Udhayanidhi Stalin, Tanya Ravichandran, Aari Arujunan, Nenjuku Needhi, Tamil Cinema 10-Apr-2022: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’. இந்த படம் வரும் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜாதி வெறி பிடித்த ஒரு கிராமத்தில் அடுத்தடுத்து தலித் பெண்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று போராடும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதைதான் இந்த நெஞ்சுக்கு நீதி படம்.

மேலும் இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆர்ட்டிகிள் 13’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.