அனிருத் இசையில் கமல் முதல்முதலில் பாடிய பாடல்! வைரலாகும் புகைப்படங்கள்

அனிருத்-கமல் கூட்டணியில் உருவான பாடல்

Kamal Haasan, Anirudh, Vikram, Tamil Cinema 10-Apr-2022: தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமான கமல்ஹாசன் நடிப்பு மட்டுமின்றி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர். உலகநாயகன் கமலஹாசன் பல படங்களுக்கு ஏற்கனவே பாடல்கள் எழுதி பாடியுள்ள நிலையில் முதல் முறையாக அனிருத் இசையில் ஒரு பாடலை எழுதி பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kamal Haasan, Anirudh, Vikram, Tamil Cinema 10-Apr-2022

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அனிருத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘விக்ரம்’ படத்தின் சிங்கிள் பாடல் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

Kamal Haasan, Anirudh, Vikram, Tamil Cinema 10-Apr-2022 002

மேலும் இந்த பாடலை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களே எழுதி, அவரே பாடி உள்ளார் என்றும் கமல் எழுதிய பாடலுக்கு இசையமைக்க கிடைத்த வாய்ப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார்.

மற்றும் ‘பத்தல பத்தல’ என்று தொடங்கும் இந்த பாடல் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.