விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் குறித்து மன உளைச்சலில் கண்ணீர் மல்கி பேட்டி அளித்த நபர்
Vignesh shivan, Nayanthara, Tamil Cinema 10-Apr-2022: இயக்குனர் விக்னேஷ் சிவன் லால்குடியை சொந்த ஊராக கொண்டவர். சிவக்கொழுந்து மற்றும் மீனாகுமாரி தம்பதிக்களுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இரண்டு பிள்ளைகள். விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் என்பவருக்கு குழந்தை இல்லை என்பதால் விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் தங்களுடைய சொந்த குழந்தை போல வளர்த்து வந்தார்.

அந்நிலையில் பணி நிமித்தம் காரணமாக விக்னேஷ் சிவனின் தாய் தந்தை கடந்த 1970-களிலேயே சென்னை வந்துவிட்டனர். அதன்பின்பு விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கும் தங்களது குடும்பத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை என கூறியுள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம், விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என வருத்தத்துடன் தெருவித்துள்ளார்.

மற்றும் தற்போது நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்யப் போகும் நிலையில், இதுவரை எங்களுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கவில்லை என்பது மன உளைச்சலாக இருப்பதாக மாணிக்கம் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இருப்பினும் விக்னேஷ் சிவன் எங்களது மகன் என்பதால் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.