Namitha 10th May 2022
நமீதா வங்கவாலா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் குஜராத்தின் சூரத்தில் 10 மே 1981 இல் பிறந்தார். இவர் 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
எங்கள் அண்ணா, மகாநடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆனை, கோவை பிரதர்ஸ், தகப்பன்சாமி, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவனில்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, சண்டை, பெருமாள், இளமை ஊஞ்சல் போன்றவை நமீதா நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ஆகும்.
நமீதா நடித்த பிறமொழித் திரைப்படங்கள் ஒக்க ராஜு ஒக்க ராணி, நீலகண்டா, லவ் கே சக்கர் மே, இந்திரா, பில்லா, பிளாக் ஸ்டாலியன், சிம்ஹா, நமீதா ஐ லவ் யூ மற்றும் புலிமுருகன். இவர் பிக் பாஸ் தமிழின் சீசன் 1 இல் பங்கேற்றிருந்தார். இவரது கர்ப்பகால புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.