கமல்ஹாசன் அடுத்த படம் குறித்து வெளிவந்த மாஸான தகவல்!

கமலின் அடுத்த படம் பற்றி வெளியான அறிவிப்பு!

kamal Haasan, Sivakarthikeyan, SK 21, Vikram, Tamil Cinema 09-Apr-2022: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது அறிந்தது.

kamal Haasan, Sivakarthikeyan, SK 21, Vikram, Tamil Cinema 09-Apr-2022

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரிப்பதாக கமலஹாசன் அறிவித்திருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

அந்தவகையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகி அல்லது இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சிவகார்த்திகேயனின் 21வது படமாகவும் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனத்தின் 51 வது படமாகவும் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.