பிரியங்கா சோப்ராவுக்கு வந்து குவியும் வாழ்த்துக்கள்
Priyanka Chopra, Tamil Cinema 09-Apr-2022: பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நிலையில், இந்த குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ராவுக்கு, வாடகைத் தாய் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை மருத்துவரின் கண்காணிப்பில் சில வாரங்கள் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து தற்போது தான் குழந்தையுடன் பிரியங்கா-நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வீடு திரும்பியுள்ளனர்.

கலிபோனியாவில் உள்ள மருத்துவமனையில் பிரியங்கா சோப்ராவின் வாடகை தாய்க்கு குழந்தை பிறந்த நிலையில், இந்த குழந்தையை 27 வாரங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து தற்போது குழந்தையுடன் பிரியங்கா சோப்ரா வீடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முதலாக பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில், இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருவதுடன் பலரும் பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும் பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ள புகைப்படம் 2.5 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று அனைவரையும் ஈர்த்து வருகிறது.