‘தளபதி 66’ பாடல்கள் குறித்து தமன் தகவல்! வேற லெவல்

‘தளபதி 66’ குறித்து இசையமைப்பாளர் பகிந்த தகவல்

Thalapathy 66, Vijay, Rashmika, Shaam, Tamil Cinema 09-Apr-2022: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியில் இசையமைப்பாளர் தமன் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் .

Thalapathy 66, Vijay, Rashmika, Shaam, Tamil Cinema 09-Apr-2022 002

கடந்த நான்கு வருடங்களில் ஒரு சில படங்களிற்கு மட்டுமே தமன் இசை அமைத்து இருந்தாலும் அவர் தெலுங்கில் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்திற்காக ஒரு சில பாடல்களை ஏற்கனவே கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் இன்னும் சில பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் ‘தளபதி 66’ பாடல்கள் குறித்து அவர் ரசிகர்களிடம் பகிர்ந்த போது ‘இதுவரை தான் இசையமைத்த பாடல்களிலேயே, இந்த படத்தின் பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என்றும், கண்டிப்பாக ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தும் அளவுக்கு பாடல்கள் இருக்கும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘தளபதி 66’ திரைப்படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப கதை என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க மற்றும் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும், இப்படம் தில்ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.