‘தளபதி 66’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குதூகலம்

தளபதி 66 படம் ரிலீஸ் தேதி வெளிவந்துள்ளது

Thalapathy 66, Vijay, Rashmika, Shaam, Tamil Cinema 09-Apr-2022: வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

Thalapathy 66, Vijay, Rashmika, Shaam, Tamil Cinema 09-Apr-2022

இந்நிலையில் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் இணைந்து உள்ள தகவல் ஏற்கனவே அறிந்ததது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு மேலும் உற்ச்சாகத்தை கொடுத்துள்ளனர். இந்த போஸ்டரில் ‘தளபதி 66’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

Thalapathy 66, Vijay, Rashmika, Shaam, Tamil Cinema 09-Apr-2022 001

ஏற்கனவே தளபதி விஜய் நடித்த, திருப்பாச்சி, நண்பன், போக்கிரி, மாஸ்டர் உட்பட பல திரைப்படங்கள் பொங்கல் தினத்தில் தான் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ‘தளபதி 66’ திரைப்படமும் அதேபோல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.