தளபதி 66 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்!
Thalapathy 66, Vijay, Rashmika, Tamil Cinema 09-Apr-2022: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ திரைப்படத்தில் ஏற்கனவே சரத்குமார், ஷாம், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்க இருப்பது உறுதி செய்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இனைய இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கும் ‘தளபதி 66’ படம் தில்ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார், சகோதரராக ஷாம், நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றனர் என்பது அறிந்ததே. இந்த நிலையில் நடிகர் பிரபு இந்த படத்தில் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் அனேகமாக நாயகி ராஷ்மிகா மந்தனாவின் அப்பா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Delighted to have #Prabhu sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/MAElJd8nRR
— Sri Venkateswara Creations (@SVC_official) May 8, 2022